எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சையாக “காஸ் சிலிண்டர்”சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் தலைமையிலான யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்றைய தினம் ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்
இன்று காலை நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் நயினாதீவு ,அனலை தீவு பகுதிகளில் மக்களை சந்தித்துகலந்துரையாடியதோடுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விற்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்
இதேவேளை இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுராதபுரத்தில் ஜெய மகா போதி விகாரையில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, அனுராதபுரத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.