இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனை தருசி கருணாரட்ன சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
தருசி தான் போட்டியில் பங்கேற்பதற்காக பயன்படுத்திய ஆடையொன்றை இவ்வாறு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ADVERTISEMENT
இந்த ஆடை (competition kits) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தின் லுசானோவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
தருசியின் நன்கொடையை பாராட்டும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நற்சான்று பத்திரமொன்றை வழங்க உள்ளது.
இனிவரும் காலங்களில் தருசி போட்டியில் பயன்படுத்திய ஆடை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.