வாரியப்பொல, பமுனகொட்டுவ பகுதியில், கலுகமுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
கலுகமுவ வீதியில் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.