கொழும்பு பம்பலப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதி இந்து கல்லூரிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் பயணிக்க முற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த விபத்து கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
ADVERTISEMENT
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.