ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் அழுத்கல பகுதியில் முச்சக்கர வண்டியும், அரச பேருந்து ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பத்தனை ஜயசிரி புரவை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் 30 வயது உடைய பெண்ணும் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
அரச பேருந்து அதன் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உட்பட முச்சக்கர வண்டியும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து ஹட்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.