சுதந்திர தினத்தை கரிநாளாக சித்த்திரித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி, போராட்டக்காரர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தே மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
இக்கைது நடவடிக்கையின் போது, அதனைத் தடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.