யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இதேவேளை இளைஞர்கள் சிலர் தமது பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ADVERTISEMENT
இது குறித்த வீடியோக்களை இணையத்தில் பார்வையிட்ட மக்கள் இவ்வாறான ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என கருத்திட்டுவருகின்றனர் .
இந்நிலையில் இது போன்ற உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.