பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பாடசலையொன்றில் மாணவர்களின் முகத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைகின்றனர். ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் டி ஏ வி பாடசாலை உள்ளது, அங்கு 46 இரட்டையர்கள் ஒன்றாக படிக்கின்றனர்.
மேலும் இங்கு, 20க்கும் மேற்பட்டவர்கள் ஒரேமாதிரியான தோற்றமுடையவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். ஆம், இந்த பாடசாலை பஞ்சாப் இரட்டையர் பாடசாலை என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படி அதிக எண்ணிக்கையில் இரட்டையர்கள் இருப்பது ஆசிரியர்களுக்குக் கூட குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நர்சரி வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, இந்தப் பாடசாலையில் உள்ளஅனைவரும் இரட்டையர்களாக உள்ளனர். 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மாதிரியான தோற்றமுடையவர்கள் உள்ளனர்
முதல்வர் டாக்டர். ரஷ்மி விஜ் கூறியதாவது, நாங்கள் தரவுகளை ஆய்வு செய்து பார்த்த போது, இங்குள்ள இரட்டைக் குழந்தைகளின் எண்ணிக்கையால் நாங்கள் வியப்படைந்தோம். ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளின் தோற்றத்துடன், அவர்களின் பழக்கவழக்கங்களும் அப்படியே இருப்பதை பாடசாலையில் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது, குழப்பத்தைத் தவிர்க்க, இந்த மாணவர்கள் வெவ்வேறு பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் சில நேரங்களில் ஆசிரியர்கள் குழப்பமடைகிறார்கள் என்று கூறியுள்ளார். இரட்டைக் குழந்தைள் உள்ளதால், சில சமயங்களில் வகுப்பில் உள்ள வேறு சில குழந்தைகளுக்காக தற்செயலாக கைதட்டல் பெறுகிறார் என்று ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.
சில சமயங்களில் ஆசிரியை தனக்கு பதிலாக தன் சகோதரியை திட்டுவதாக பாடசாலை மாணவி ஒருவர் கூறியுள்ளார். பெரும்பாலான இரட்டைக் குழந்தைகளில் இரு குழந்தைகளின் பழக்க வழக்கங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவது தெரியவந்தது. இதுகுறித்து அங்குள்ள பாடசாலை ஆசிரியை ஷிவானி கூறியதாவது, பாடசாலையில் இரண்டு இரட்டை சகோதரிகள் உள்ளனர், இருவரும் படிப்பில் முதலிடம் பெற்றுள்ளனர் என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
சில நேரங்களில் கருத்தரிப்பு செயல்முறைக்குப் பிறகு, முட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிகிறது. இந்த சூழ்நிலையில், கருப்பையில் இரண்டு தனித்தனி குழந்தைகள் உருவாகின்றனர்.
இதனால் தற்போது இரட்டை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டி ஏ வி யில் மொத்தமாக 46 இரட்டையர்கள் ஒன்றாக படிக்கும் சம்பவம் வைரலாகி வருகிறது.