வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை கல் விகாரையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, பொலன்னறுவை கல் விகாரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு உள்ள வியாபாரிகளும் அதிக சிரமத்திற்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலன்னறுவை தொல்பொருள் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.