28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

செந்தமிழ் பிரீமியர் லீக் கிண்ணம் ஈஸ்டன் யுனைட்டட் வசம்

வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம் நடத்திய செந்தமிழ் உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று  12.09.2024 மாலை உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது

செந்தமிழ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் மாலை 4 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது

ஈஸ்டன் யுனைட்டட் அணியை எதிர்த்து செந்தளிர் F.c மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பமே போட்டி விறுவிறுப்பாக ஆரம்பமாக செந்தளிர் அணியினரால் முதல் கோல் போடப்பட்டது.சில நிமிடங்களிலையே பதிலுக்கு ஈஸ்டன் யுனைட்டட் அணியினராலும் ஒரு கோல் போடப்பட ஆட்டம் சூடு பிடித்தது 

இரண்டாவது கோலினை செந்தளிர் Fc செலுத்தி 2-1 என முன்னிலையில் இருந்த போது போட்டி முடிவின் சொற்ப நேரத்தில் ஈஸ்டன் யுனைட்டட் அணியால் மேலும் ஒரு கோல் போடப்பட்டு ஆட்டம் சமநிலையாக இறுதியில் போட்டியின் முடிவு தண்ட உதைக்கு மாற்றப்பட தண்ட உதையின் முடிவில் செந்தமிழின் 2024 ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட பிரிமீயர் லீக் கிண்ணத்தை ஈஸ்டன் யுனைட்டட் தனதாக்கி கொண்டது.

குறித்த இறுதி போட்டியில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசதலைவர்,கிராமசேவகர்,கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள்,அணியின் உரிமையாளர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பாரிய நிதிமோசடி இன்னும் தீர்வில்லை: சாணக்கியன் கருத்து தெரிவிப்பு !

User1

விபத்துக்குள்ளாகி வீட்டின் கூரையில் கவிழ்ந்த கார் :பெண்ணொருவர் படுகாயம்

User1

‘பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் அதிமுன்னுரிமை’

User1

Leave a Comment