28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்

இலங்கை படையினர் மீது குற்றம் சுமத்தியுள்ள நாகப்பட்டிணம் கடற்றொழிலாளர்கள்

இலங்கை கடற்படை கப்பல் ஒன்று தமது மீன்பிடி படகு மீது வேண்டுமென்றே மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தமிழ்நாட்டின் கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்போது கடற்றொழிலாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதுடன், இலட்சக்கணக்கான மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் சேதமடைந்ததாக முறையிடப்பட்டுள்ளது

2024 செப்டம்பர் 10 ஆம் திகதியன்று மாலை கோடியக்கரை கடற்கரைக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டுக் கப்பல் ஒன்று தமக்கு சமிக்ஞை செய்தது.

இதனையடுத்து தாம் கைகளை உயர்த்தியபோது, குறித்த கடற்படை படகு தமது படகுடன் வேண்டுமென்றே மோதியதாக நாகப்பசடிணம் கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்போது, தாம் கடலில் வீசப்பட்டபோதும் மீன்பிடி வலையில் சிக்கி உயிர் பிழைத்ததாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்த சம்பவத்தின்போது படகு மட்டும் மூழ்கவில்லை, இலங்கை கடற்படையினரால் வலைகள் வெட்டி வீசப்பட்டன.

எனினும் இலங்கையின் கடற்படையினர் உயிர்க்காக்கும அங்கிகளை வழங்கினர் இறுதியில் தாங்கள் ஏனைய கடற்றொழிலாளர்களால் பல மணி நேரம் போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டதாக நாகப்பட்டிணம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

வசூலை வாரிக்குவிக்கும் தங்கலான்.. 

User1

தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம்… இதுவரையிலான மொத்த கலெக்ஷன்

User1

யூடியூப் காணொளிகளை பார்த்து சத்திரசிகிச்சை செய்த நபர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

User1

Leave a Comment