28.4 C
Jaffna
September 19, 2024
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறையில் பிடிபட்ட அரிய வகை உயிரினம்!

அம்பாறை – கல்முனையில் நன்னீர் நாய் எனப்படும் அரிய வகை உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அரியவகை உயிரினமான நன்னீர் நாயானது கடந்த சனிக்கிழமை(7) பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நன்னீர் நாய் எனப்படும் உயிரினம் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிடிக்கப்பட்ட நன்னீர் நாயானது நீர்நாய் வகையைச் சேர்ந்தது என்பதுடன் (Smooth-coated Otter) இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது.

அத்துடன், இந்த உயிரினம் பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுவதுடன் இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது.

இதேவேளை, குறித்த உயிரினம் மற்ற நீர் நாய்களை விட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது.

இவை ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத் தோலை கொண்டுள்ளதுடன் இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரிலும் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு..!

sumi

முருங்கை செய்கையாளர்கள் முருங்கையின் விலை இன்மையால் பாதிப்பு

User1

சற்று முன் யாழில் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

sumi

Leave a Comment