பாரம்பரிய உணவுகளை அதே சுவையுடன் சாப்பிடுவதற்கான அரிய வாய்ப்பை றீ(ச்)ஷா மக்களுக்கு வழங்கியுள்ளது.
றீ(ச்)ஷாவின் அக்சய பாத்திரம் 2024 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு திருவிழா கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த மாபெரும் உணவுத் திருவிழா நிகழ்வானது நான்கு நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது.
கிளிநொச்சி (Kilinochchi) – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) பண்ணைக்கு சென்று இந்த உணவுத் திருவிழாவில் நீங்களும் பங்கேற்களாம்.
பாட்டி, அம்மா,அப்பம்மானு , அவர்கள் கையால் செய்து கொடுக்கும் உணவின் சுவைகளை யாராலும் மறக்க முடியாது அவற்றின் தனித்தன்மையுடன் பாரம்பரிய உணவுகளை உண்பதற்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.