28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘ஏ ஆர் எம்’ எனும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

பான் இந்திய நட்சத்திர நடிகரான டொவினோ தோமஸ் கதையின் நாயகனாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘ஏ ஆர் எம்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘கிளியே..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஏ ஆர் எம்’ எனும் திரைப்படத்தில் டொவினோ தோமஸ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி, பஃஸில் ஜோசப், ரோகிணி , ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜோமோன் டி. ஜோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி ஜேனரிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை மேஜிக் ஃபிரேம்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லிஸ்டீன் ஸ்டீபன் மற்றும் டொக்டர் ஜக்காரியா தோமஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தயாராகி இம்மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

 இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘பூவே பூவே தாழம்பூவே..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 இந்த பாடலை பாடலாசிரியர் கிருத்திகா நெல்சன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் மற்றும் பாடகி அனிலா ராஜீவ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

 மெல்லிசையுடன் கூடிய காதல் பாடலாக உருவாகி இருக்கும் இதனை இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக மாறி இருக்கிறது.

Related posts

விஜய்யின் அரசியல் மாநாடு நடக்காது.. பிரபல Journalistகளின் Roundtable

User1

இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்..! {படங்கள்}

sumi

உலகம் முழுவதும் செயலிழந்த பேஸ்புக்..!

sumi

Leave a Comment