27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்

புதுக்குடியிருப்பில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மூவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி மக்களை ஓர் இடத்தில் ஒன்றுதிரட்டி காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதாகவும் , வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதாகவும்  வாக்குறுதிகளை கூறி மக்களிடம் 200 ரூபா பெறப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியினரால் படிவம் பூரணப்படுத்தப்பட்டு வந்திருந்தது. 

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸார் அவர்களிடம் இருந்த படிவங்களை பறிமுதல் செய்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியினை சேர்ந்த இருவர் மற்றும் வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related posts

அனுமதியின்றி அதிரடிப்படை- பொலிஸ் சீருடைகளை வைத்திருந்தவர் கைது!

User1

மாற்றுத்திறனாளிகள் தற்காலிக அடையாள அட்டையை தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாம் !

User1

இளம் காதல் ஜோடி உயிரை மாய்ப்பு – மரணம் தொடர்பில் தொடரும் மர்மம்

User1

Leave a Comment