27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமைச்சரவை தீர்மானங்கள்

தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராகநடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம் ஏஎல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த அமைச்சரவை தீர்மானம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பதை கண்டுபிடிப்பதற்கான அதிகாரம் எங்களிற்கு உள்ளது முறைப்பாடு இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எங்களால் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் என தெரிவித்துள்ள அவர் அமைச்சரவையின் தீர்மானங்கள் கிடைத்ததும் நாங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்  ஏதாவது உள்ளனவா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

User1

சிறுநீர் கழிப்பதற்காக மரத்தடிக்கு சென்ற பொலிஸ் பரிசோதகருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

sumi

சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்’ – தலைவர் ரிஷாட் உறுதி!

User1

Leave a Comment