புனித திருத்தந்தை பிரான்சிஸ் நாளை மறுதினம் (3) இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே பாப்பரசர் இந்தோனேஷியா வருகிறார்.
சமய ஒற்றுமையின் பிரதிபலிப்பாக, தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள முக்கிய முஸ்லிம் மசூதியையும் கத்தோலிக்க தேவாலயத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையையும் பாப்பரசர் மேற்பார்வையிடுவார்.
இந்த சுரங்கப்பாதைக்கு நட்பு சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.