பாகிஸ்தானில்(Pakistan) கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீடொன்றின் மேல் சரிந்து விழுந்ததில் உள்ளே இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.