27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

கராத்தேப் போட்டியில் 10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற பாடசாலை

கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்களையும் 11 வெள்ளிப் பதக்கங்களையும் 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளனர்.

குறித்த போட்டியானது ராம் கராத்தே சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக அக்கரைப்பற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(25.08.2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேச பாடசாலையாகவும், இதுவரை எவ்வித பொதுப்போக்குவரத்து வசதியில்லாத பாடசாலையாகவும் இப்பாடசாலை காணப்படுகின்ற அதேவேளை, கராத்தே விளையாட்டிற்கான அடிப்படையான விளையாட்டுப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையிலும் குறித்த மாணவர்கள் இந்த சாதனையை நிலை நாட்டியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

கராத்தே பயிற்றுவிப்பாளரின் தொடர் அர்ப்பணிப்பிலான பயிற்சியினாலும் உடற்கல்வி ஆசிரியரின் பயிற்சி மற்றும் சேவைகடந்த முயற்சியினாலும் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிக்குறைப்பாடுகளுடன் இந்த பாடசாலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதக்கங்களைப் பெற்ற மாணவர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும், அதிபர் ஆசிரியர்களையும் விளையாட்டு ஆர்வலர்களும், கல்விச் சமூகம் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

தேங்காய்க்கு தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் !

User1

விஜய்யை சந்திக்க ராஜபக்‌ச குடும்பம் ஆர்வம்

sumi

வாக்களிப்பு நாளில் இவற்றுக்கு தடை !

User1

Leave a Comment