இஸ்ரேல் மீது நாங்கள் மேற்கொண்ட தாக்குதல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்
தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பாதிப்புகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்வோம்,எதிர்பார்த்த சேதங்கள் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார்.
எங்கள் அமைப்பின் இராணுவநடவடிக்கை திட்டமிட்டபடி துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலிற்குள் 110 கிலோமீற்றர் உள்ளே உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் அயர்ன் டொமை நோக்கி கெட்டுசா ரொக்கட்களை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் சிரேஸ்ட தளபதியை இஸ்ரேல் கொலை செய்தமைக்கு பழிவாங்குவதற்காக பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்குவைக்க நாங்கள் விரும்பவில்லை. என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேலின் உட்கட்டமைப்பை இலக்குவைக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.