28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

மேற்காசிய நாடான இஸ்ரேல், பலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் இராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர்.

பலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், 70 ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

குறிப்பாக, இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் இராணுவ அமைச்சரவை கூட்டம் நடந்தது. அடுத்து 48 மணி நேரத்திற்கு இராணுவ அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

லெபனான் நாட்டில் இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசாவில் நடத்தியதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி விட்டது தெரியவந்துள்ளது

Related posts

100 ஆவது போட்டியில் அடம் சம்பா

User1

மின்னல் தாக்கி காற்பந்து வீரர் பலி.!

sumi

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

User1

Leave a Comment