28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

புதுவிதமான சேர்க்கை கடிதத்தை அனுப்பிய சீன பல்கலைகழகம்

சீனாவின் பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மிக மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்தக் கடிதங்களை நினைவுப் பொருளாக வைப்பதற்குப் பதில், அவற்றை சோதனைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். சேர்க்கை கடிதத்தை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

இதையடுத்து, மாணவர்கள் கடிதங்களைப் பரிசோதிப்பதை நிறுத்தும்படியும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன சாதனைகளை பிரதிபலிக்கும் தனித்துவமான கலைப்பொருளாக பாதுகாக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வலியுறுத்தியது.

தங்கள் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் பொருட்கள் எவ்வளவு நீடித்த மற்றும் நம்பகமானவை என்பதைக் காட்ட விரும்பவே இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

03 சீனப் போர்க்கப்பல்களும் இந்தியப் போர்க்கப்பல் ஒன்றும் கொழும்பில் !

User1

ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்த 2 புலம்பெயர்ந்தவர்கள் பலி

User1

அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – 14வயது சிறுவன் கைது

User1

Leave a Comment