28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார்.

தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார்.

இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும், 34 டெஸ்ட் போட்டிகளில் 2,315 ஓட்டங்களையும் தனதாகியுள்ளார். இவர் இந்திய அணிக்காக ஒட்டுமொத்தமாக 24 சதங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இளம் வீரர்களின் வருகையால் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் தவிர்க்கப்பட்டு வந்த ஒரு வீரராக தவான் காணப்படுகிறார்.

இறுதியாக 2022இல் பங்களாதேஷிற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியிருந்தார்.

ஐ.பி.எல் தொடர்களில் டெல்லி , மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள தவான், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

Related posts

8 ஆண்டுகளின் பின் இங்கிலாந்து மண்ணில் இன்று களமிறங்கும் இலங்கை டெஸ்ட் அணி

User1

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ; பயணக்கட்டணம் அறிவிப்பு !

User1

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

User1

Leave a Comment