27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இரத்துச் செய்யப்படும் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பிலான உண்மைகளை திணைக்களம் தெளிவு படுத்தியுள்ளது.

அதன்படி, அவ்வாறான சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு தீர்மானத்தினையும் எடுக்கவில்லை என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சுடன் ஆலோசித்து, சாலை பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கருப்பு மதிப்பெண் வழங்கும் முறையை நடைமுறைப் படுத்தும் பணி தொடங்கப் பட்டுள்ளது என்றும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய முறையை நடைமுறைப் படுத்துவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

புதிய முறையின் மூலம் சாரதியொருவர் போக்குவரத்து விதிமீறலைச் செய்த பிறகு, போக்குவரத்து பொலிஸார் வழங்கும் டிக்கெட்டுக்கு ஏற்ப அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்த டிஜிட்டல் சிஸ்டம் தயார் செய்யப்பட்டு, அந்த விதிமீறலுக்கான அபராதப் புள்ளிகள் சாரதி அனுமதிப் பத்திரத்தில் சேர்க்கப்படும்.

இந்த முறையின் கீழ் 24 கருப்பு புள்ளிகளை எட்டியதும் ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு இரத்து செய்யப்படும் ஓட்டுநர் உரிமத்தை திரும்பப்பெற ஒரு ஓட்டுநர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இலங்கையில் நாளொன்றுக்கு 7 பேர் நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழப்பதாலும், வீதி விபத்துக்களினால் அங்கவீனர்களாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நெடுஞ்சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்த இந்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம் !

User1

கடவுச்சீட்டு தொடர்பில் வௌியான விசேட அறிவிப்பு !

User1

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டிகளில் வவுனியா சைவப்பிரகாச சாதனை!

User1

Leave a Comment