28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடி : ஒருவர் கைது

ஜேர்மனியில் (Germany) வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டதாக கந்தர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கந்தர காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் காவல் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?

sumi

மின்னல் தாக்கி காற்பந்து வீரர் பலி.!

sumi

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு..!

sumi

Leave a Comment