இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 23ஆம் திகதி உக்ரைன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விஜயத்தின் பொது அவர் அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமருக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றவுள்ளமை விசேட அம்சமாகும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.