27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் பரவல்

உலகளாவிய ரீதியில் குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எம்பொக்ஸ் எனும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த நோய்த் தொற்று பாகிஸ்தானில் மூன்று பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு சென்று திரும்பயவர்களே இந்த தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

Related posts

நேருக்கு நேர் மோதி புரண்ட 2 டிப்பர்கள்!! A9 வீதியில் மற்றொரு பயங்கரம்..

sumi

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்

User1

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கவனிப்பாரற்று ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

sumi

Leave a Comment