28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வ அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம்  திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று (18) முற்பகல் 12.00 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே ரணிலுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

Related posts

எரிபொருள் இன்மையால் திடீரென நிறுத்தப்பட்டது நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை!

User1

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடித்த பட்டாசில் சிக்கி பொலிஸார் உட்பட 8 பேர் காயம் !

User1

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

User1

Leave a Comment