28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

பிரேசிலில் எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணர் கைது செய்யப்படுவார் என்று நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரேசிலில் அலுவலகத்தை மூடுவதற்கான முடிவு கடினமானது. ஆனால் நீதிபதியின் ரகசிய தணிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தால், நாங்கள் விளக்கங்களை அளிக்க முடியாமல் போய் விடும் என்றார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அலுவலகம் மூடப்பட்டாலும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையர் பணிபுரியும் தொழிற்சாலையில் தீவிபத்து

sumi

இந்தியாவின் “தரங் சக்தி” பயிற்சியில் இலங்கை விமானப்படையின் பீச்கிராஃப்ட் விமானம் பங்கேற்பு

User1

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தலையிடப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

User1

Leave a Comment