27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்யாழ் செய்திகள்

கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது – சுகாஸ் தெரிவிப்பு!

கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு ஆலயச் செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமென்று கோருகின்றோம்.

ஆளுநரின் அடாவடிகள் தொடர்தால் வடக்குக் கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை இத்தால் சம்பந்தப்பட்டோருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிவாராக! அரசின் எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரைக் கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மடுவில் விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு

sumi

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ் வணிகர் கழகத்தில் சந்திப்பு !

User1

ரயிலில் மோதி ஒருவர் பலி !

User1

Leave a Comment