தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிற்கு திரும்பியுள்ள இலங்கைக்கான பாலஸ்தீன தூதுருக்கும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் நேற்றையதினம் (12) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும், இரு நாடுகளையும் பிணைக்கும் வலுவான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் அத்தோடு பாலஸ்தீன மக்கள் மீதான அமைச்சரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் வகையில், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாலஸ்தீன மக்கள் பாரிய இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளான இக்காலத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சாதாரண இலங்கையர்கள் எவ்வாறு பாலஸ்தீன மக்களின் நலனுக்காகப் பங்களிக்க முன்வந்துள்ளனர் என்பதைத் தூதுவர் இதயப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும், இலங்கையிதனது ஒரு தசாப்தகால இராஜதந்திர சேவையில் இலங்கை மக்களுடன் அவர் கட்டியெழுப்பிய வலுவான தொடர்புகள் மற்றும் பிணைப்புகள் காரணமாக, இலங்கையை விட்டு வெளியேறுவதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சிரமங்களை பாலஸ்தீன தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.