28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

பிரித்தானியாவில் திடீரென மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த வீடு

பிரித்தானியாவின் ஏவிமோர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் ஸ்காட்லாந்தின் ஏவிமோர் பகுதியின் கிராம்பியன் வியூவில் (Grampian View)நேற்று(12.08.2024) இடம்பெற்றுள்ளது.

தீ பரவல் ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ பரவலினால் வீட்டின் கூரை இடிந்து விழுந்துள்ளதுடன் அதிர்ஷ்டவசமாக, வீட்டில் வசித்த குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 15,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் கடும் மழை காலங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் அவசர சேவை பிரிவி அறிவுறுத்தியுள்ளது.

Related posts

நைஜீரியாவில் விபத்தில் சிக்கிய எரிபொருள் கொள்கலன் வெடித்து சிதறியது – 48 பேர் பலி

User1

பூமி திரும்புவரா? சுனிதா வில்லியம்ஸ்!

User1

இத்தாலியில் கொள்ளையடிக்க சென்ற இலங்கையரின் பரிதாப நிலை

User1

Leave a Comment