நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் நடிகராக ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று இருந்தவர்.
அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் தான், இப்போதும் இளைஞர்களின் பிளே லிஸ்டில் முக்கியமாக இருக்கும்.
தற்போது இவரது நடிப்பில் அந்தகன் படம் வெளியாகியுள்ளது, இப்படம் ஹிந்தியில் செம ஹிட்டடித்த படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார், இதில் சிம்ரன், ப்ரியா ஆனந்த் போன்றோரும் நடித்துள்ளனர்.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அந்தகன் நல்ல வரவேப்றை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 3.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.