28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்

சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு: செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அழைப்பு

இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொடமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடானது இம்மாதம் 24,25 ஆம் திகதிகளில் தமிழ் நாட்டில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டின் உலகளாவிய ரீதியில் இந்து சமயத்தின் வளர்ச்சி குறித்து செந்தில் தொண்டமான் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து முருக பக்தர்கள், ஆன்மிக பெரியோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் விழாவாக இது காணப்படுகிறது.

தமிழ் கடவுள் என போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை உலகறியும் வகையிலும், பறைசாற்றியவர்களை சிறப்பிக்கும் வகையிலும் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு இங்கு நடைபெறவுள்ளது.

Related posts

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

User1

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார்.

sumi

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சி கண்ணாபுரம் மக்கள் நன்றி தெரிவிப்பு!

User1

Leave a Comment