27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. 

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,  ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 248 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு ( சீனாவிலிருந்து இறக்குமதி ) 230 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒரு கிலோ வெள்ளை கௌப்பி 978 ரூபாவாகவும், ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 255 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப் பயறு 935 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 920 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 280 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 790 ரூபாவாகவும், ஒரு கிலோ நெத்திலி கருவாடு 940 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 442 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 202 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.  

Related posts

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை

User1

சிலர் எனது கருத்தை திரிபுபடுத்துகிறார்கள் – மனோ எம்பி ஆதங்கம்

User1

கடந்த ஆண்டின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வரி வருவாய் 28.5% அதிகரிப்பு !

User1

Leave a Comment