புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மகோற்சவ பெருவிழா நாளை(08.08.2024) மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை 27 நாட்கள் இந்த மகோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில், கொடியேற்றம் 09 ஆம் திகதியும் இரதோற்சவம் செப்டம்பர் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளன.