28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

கெஹலியவுக்கு ஒட்சிசன்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு மருந்துகளுக்கு அப்பால் ஒட்சிசனும் வழங்கப்படுகின்றது என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்: “கெஹலியவின் நோய்க்கு, அவர் ​அமைச்சராக இருந்த போது, இந்தியாவில் உள்ள நிறுவனத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்தே வழங்கப்படுகின்றது”

சிங்கபூரில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள், கெஹலியவுக்கு வழங்கப்படுவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார் எனவும், ரம்புக்வெலவுக்கு 7 நோய்கள் உள்ளன என்பது வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெஹலியவுக்கு இரவு வேளைகளில் ஒட்சிசன் வழங்கப்படுகின்றது. அதற்கான வசதி அவருக்கு வழங்கப்படுகின்றது

70 வயதான அவருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்கள் உள்ளன. எட்டு அல்லது ஒன்பது நோய்களுக்கு குளிசைகள் வழங்கப்படுகின்றன.

சிறைவாசம் அனுபவித்து வரும் அத்தகைய நோயாளியின் உயிருக்கு அரசும் பொறுப்பு என்பதால், கைதியின் நிலை என்னவாக இருந்தாலும், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் 145 படுக்கைகளில் 380 நோயாளர்கள் இருக்கின்றனர். மேலும் இங்கு இருநூறு வீதம் நெரிசல் அதிகமாகவும் இருக்கிறது.

அங்குள்ள நோயாளிகள் அனைவரும் விசேட பிரமுகர்கள் அல்ல, மருத்துவ சிகிச்சைக்கு தகுதியானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

..
3

Related posts

நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பொலிசார்-நடந்தது என்ன..?

sumi

வவுனியாவில் ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது -இரு வாகனங்களும் பறிமுதல்

sumi

போரதீவுக்குப் படையெடுத்த காட்டு யானைகள்

sumi