உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவின் போர் வானூர்திகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி சேமிப்பு நிலையங்கள், மற்றும் கடற்கரை ரேடார் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் என்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் மீதான தனது கடும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், “நாங்கள் நியாயமாகச் செயல்பட முடியாத ஒரு கட்டம் வரலாம்.

அப்போது, நாங்கள் வெற்றிகரமாகத் தொடங்கிய வேலையை இராணுவ ரீதியாக முழுமையாக முடிக்க நேரிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு என்பதே இல்லாமல் போய்விடும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் நிலவி வந்த பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0