உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க ஈரான் அமைதி பேச்சுவர்த்தையை இஸ்ரேல் குழப்பக் கூடும்!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
51 பார்வைகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள்,  பாதிக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இது அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களை மீறும் வகையில் உள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அண்மையில் ஹிஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இந்த பதற்றமான சூழலால், சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வரவிருப்பதால், லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ நெதன்யாகுவிற்கு உள்நாட்டு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களின் தீவிரம் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.

பிரான்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் தங்களுக்குள் “சிறிய சர்ச்சை” இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, இஸ்ரேலை நிதானம் காக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது தெற்கு லெபனானில் 200 சதுர மைல்க்கும் அதிகமான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து வெளியேறாத வரை, நிரந்தரப் போர்நிறுத்தம் சாத்தியமில்லை என்றும், மீண்டும் பதற்றம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

92 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

29 0 0