சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் இன்று (04) காலை பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து பேருந்து தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்படும் போது பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.