உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தந்தையின் உடலின் கீழ் நசுங்கி மகன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கம்பளை, நாரன்விட்ட – ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டினுள் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பரணில் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கான தண்ணீர்க் குழாயை எடுப்பதற்காக தந்தை மேலே ஏறியுள்ளார்.

அந்த நேரத்தில், தந்தைக்குப் பின்னால் சென்ற 3 வயது சிறுவன் பரணின் கீழ் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்த போது, பரணிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தந்தை, நேரடியாக தனது மகன் மீது விழுந்துள்ளார்.

இதன்போது, தந்தையும் குழந்தையும் படுகாயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக கம்பளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த தந்தை கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

68 0 0