• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 29, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

உலகின் முதலாவது அணு மின் நிலையம் நிறுவப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
August 27, 2025
in வரலாற்றில் இன்று
0
உலகின் முதலாவது அணு மின் நிலையம் நிறுவப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1810
நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய அரச கடற்படையைத் தோற்கடித்தது. இதன் மூலம் பிரெஞ்சுத் தீவில் கிராண்ன் போர்ட் துறைமுகத்தை பிரித்தானியா கைப்பற்றுவதை முறியடித்தது.

1813
பிரெஞ்சுப் பேரரசன் முதலாம் நெப்போலியன் ஆஸ்த்திரிய, ரஷ்ய, புருசியப் பெரும் படைகளை திரெஸ்டன் சமரில் வென்றான்.

1828
பிரேசிலுக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவை தனிநாடாக அறிவிக்கப்பட்டது.

1832
அமெரிக்காவின் சவுக் பழங்குடித் தலைவர் பிளாக் ஹாக் அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தார். பிளாக் ஹாக் போர் முடிவுக்கு வந்தது.

1859
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.

1881
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஜியார்ஜியா சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.

1883
இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

1893
ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1896
ஆங்கிலேய – சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சான்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (09:02 – 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.

1916
முதலாம் உலகப் போர்: உருமேனியா ஆஸ்திரியா-அங்கேரியுடன் போரை அறிவித்தது.

1928
போரை சட்டவிரோதமாக்கும் கெலொக் – பிறையண்டு உடன்படிக்கையில் 15 நாடுகள் கையெழுத்திட்டன. மொத்தமாக 61 நாடுகள் இதில் பின்னர் கையெழுத்திட்டன.

1933
ஆபிரிக்கான மொழியில் விவிலியம் முதல் தடவையாக மொழிபெயர்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் புளும்பொன்டின் நகரில் இடம்பெற்ற விவிலிய விழாவில் இது அறிமுகமானது.

1939
உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது.

1942
உக்ரைனில் சார்னி என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை ஆரம்பமானது. இரண்டு நாள் தாக்குதல்கலில் 14,000 முதல் 18,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1943
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் சொலமன் தீவுகளில் ஒன்றான நியூ ஜோர்ஜியா தீவில் இருந்து வெளியேறினர்.

1943
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் வான் சண்டைப் படை கிரீட் நகரில் வொரிசியா கிராமத்தைக் குண்டு வீசி அழித்தது.

1952
லக்சம்பேர்க்கில் மேற்கு ஜேர்மனிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் நட்டஈடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஜேர்மனி 3 பில்லியன் டொச்சு மார்க்கை நட்டஈடாகச் செலுத்த ஒப்புக் கொண்டது.

1956
உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.

1957
மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.

1962
நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் கோளை நோக்கி ஏவியது.

1971
ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது. சாட் அரசு எகிப்து மீது குற்றம் சாட்டியது.

1975
போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.

1979
அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1982
துருக்கிய இராணுவ தூதர் அட்டில்லா அல்டிகாட் கனடாவின் ஒட்டாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1915ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கவென இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்மீனிய தீவிரவாதக் குழு இதற்கு உரிமை கோரியது.

1985
நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது.

1991
எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது.

1991
சோவியத் ஒன்றியத்தில் இருந்து மல்தோவா பிரிந்து தனிநாடாகியது.

2003
செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக (55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு) கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.

2003
வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு அமைதி வழியில் தீர்வு காணும் பொருட்டு தெற்கு மற்று வட கொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், உருசியா ஆகிய ஆறு நாடுகள் முதல் கட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டன.

2006
அமெரிக்காவின் கென்டக்கியில் புளூகிராஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொம்ஏர் விமானம் சிறிது நேரத்தில் தரையில் வீழ்ந்து நொருங்கியதில் 50 பேரில் 49 பேர் உயிரிழந்தனர்.

2009
பர்மாவின் கோக்காங் சிறப்புப் பிராந்தியத்தில் பர்மிய இராணுவத்துக்கும் உள்ளூர் இராணுவத்துக்கும் இடையில் மூன்று நாள் சமர் இடம்பெற்றது.

2011
ஐரீன் சூறாவளி அமெரிக்காவின் கிழக்குக் கரையைத் தாக்கியதில் 47 பேர் உயிரிழந்தனர்.

Related Posts

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 12, 2025
0

1814பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன. 1848சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. 1857மத்திய அமெரிக்கா...

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 11, 2025
0

1889யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. 1998யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன்...

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 10, 2025
0

1817பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது. 2000இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார். 2006முகமாலை முன்னரங்கப்...

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 9, 2025
0

1990சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை...

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 8, 2025
0

1775மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1796பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர். 1831நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். 1860லேடி எல்ஜின் என்ற...

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 7, 2025
0

1978கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 1999இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி...

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 6, 2025
0

1873இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார். 1946இலங்கையில் ஐக்கிய...

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 5, 2025
0

1803இலங்கையில் முதலாவது கண்டிப் போர்க் காலத்தில், அங்வெல்லையில் பிரித்தானியப் படைகளினால் கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. 1902இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல்...

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 4, 2025
0

1800மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது. 1812பிரித்தானிய அமெரிக்கப் போர் - அரிசன் கோட்டை முற்றுகையின் போது...

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 3, 2025
0

1759இலங்கை டச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. 1958தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1189முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி