1814
பிரித்தானியப் படைகள் வாசிங்டன், டி. சி.யை முற்றுகையிட்டு, வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் மற்றும் பல கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
1821
மெக்சிகோவின் எசுப்பானியாவுடனான மெக்சிக்கோ விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1857
ஐக்கிய அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது.
1891
தாமசு ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1911
மனுவேல் சி அரியாகா போர்த்துகலின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1931
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது தொழிற்கட்சி அரசு பதவி விலகியதை அடுத்து, தேசிய அரசு ஆட்சிக்கு வந்தது.
1931
பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1932
அமேலியா ஏர்ஃகாட் லாஸ் ஏஞ்சலஸ் முதல் நுவார்க் வரை தனியாளாகப் பறந்து ஐக்கிய அமெரிக்கா மீது பறந்த முதலாவது பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1936
அவுஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் உருவாக்கப்பட்டது.
1937
எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர்: பாசுக்கு இராணுவம் இத்தாலியிடம் சரணடைந்தது.
1941
இரண்டாம் உலகப் போர்: உளப் பிறழ்ச்சி, மற்றும் வலது குறைந்தோருக்கான நாட்சி ஜெர்மனியின் டி4 கருணைக்கொலைத் திட்டத்தை கிட்லர் இடை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். ஆனாலும், இக்கொலைகள் போர் முடியும் வரை தொடர்ந்தன.
1942
இரண்டாம் உலகப் போர்: கிழக்கு சொலமன் தீவுகளில் நடந்த சமரில், ஜப்பானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ரியூஜோ மூழ்கடிக்கப்பட்டதில் 120 பேர் உயிரிழந்தனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் பாரிசுத் தாக்குதல் ஆரம்பமானது.
1949
வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமுலுக்கு வந்தது.
1954
அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
1954
பிரேசில் ஜனாதிபதி கெட்டூலியோ வார்காசு தற்கொலை செய்து கொண்டார்.
1970
வியட்நாம் போர் எதிர்ப்பாளர்கள் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தின், இசுட்டெர்லிங் மண்டபத்தில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்தனர்.
1989
கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவர்கள் கொலம்பிய அரசு மீது “முழுமையான போரை” ஆரம்பித்தனர்.
1991 –
மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.
1991
உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி தனி நாடானது.
1992
சூறாவளி ஆண்ட்ரூ புளோரிடாவில் தரை தட்டியது.
1992
மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
1994
பாலத்தீனர்களுக்கு மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் பலத்தீன விடுதலை இயக்கமும் கையெழுத்திட்டன.
1995
வின்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
2004
மாஸ்கோவில் தமதேதவோ வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு விமானங்கள் செச்சினியத் தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் உயிரிழந்தனர்.
2006
புளூட்டோ ஒரு கோள் அல்லவெனவும், அது குறுங்கோள் எனவும் உலகளாவிய வானியல் ஒன்றியம் அறிவித்தது.
2008
சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.
2008
கிர்கிசுத்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் உயிரிழந்தனர்.
2010
மெக்சிக்கோவில் 72 சட்டவிரோதக் குடியேறிகள் லோசு சேட்டாசு என்ற போதைப்பொருள் கடத்தல் அமைப்பினரால் கொல்லப்பட்டனர்.
2016
மத்திய இத்தாலியில் ஏற்பட்ட 6.2 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 300 பேர் வரை உயிரிழந்தனர்.














