1860
இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.
1991
இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
1998
இலங்கை, வவுனியாவில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சண்முகநாதன் கொல்லப்பட்டார்.
1815
நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான்.
1816
பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார்.
1823
உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது.
1834
எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.
1857
சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
1870
அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1870
ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1888
ஜப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.
1916
வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
1927
வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆஸ்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946
ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது.
1955
அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.
1959
ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.
1974
சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.
1975
விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.
1983
பாரிசில் ஓர்லி விமான நிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
2002
அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல்லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த அகமது சேக்கிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
2003
டைம் வார்னெர் நெட்சுகேப் நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
2006
டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
2014
மாஸ்கோவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.














