1803
கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர். ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.
1900
தாவோயிசத் துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் மொகாவோ கற்குகைகள் தொடர்பான அரிய கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தார்.
1910
ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறவேற்றியது.
1935
சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.
1940
இரண்டாம் உலகப் போர்: பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.
1943
பெரும் இன அழிப்பு: போலந்து, செஸ்டசோவா வதைமுகாமில் யூதர்கள் நாட்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1944
இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
1950
வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.
1960
பனிப்போர்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர்களாகப் பணியாற்றிய குறியாக்கவியலாளர்கள் இருவர் மெக்சிக்கோவிற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்றனர்.
1975
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
1975
போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
1981
மைக்ரோசாப்ட் வாசிங்டனில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1983
பிரித்தானியாவில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
1991
குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.
1996
சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
1997
ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் ரஷ்ய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.
1998
வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
2007
கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
2017
ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.















