1846
இலங்கையின் அரச ஆசிரியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.
1808
யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.
1836
ஆர்கன்சா 25ஆவது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1844
இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1846
அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
1878
குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இப் புகைப்படமே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.
1888
முடிக்குரிய இளவரசர் வில்லியம் ஜெர்மானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு ஜேர்மனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.
1896
ஜப்பானில் சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1904
நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1909
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலார்ட்சுவில் கூடி, இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை ஆரம்பித்தனர்.
1937
கார்ல் வியென் தலைமையில் சென்ற ஜேர்மானியக் குழு நங்க பர்வதத்தில் பனிச்சரிவில் சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.
1940
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி பாரிசு நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
1944
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
1944
சசுக்காச்சுவான் பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது சோசலிச அரசு பதவியேற்றது.
1954
ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1977
எசுப்பானியாவில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.
1978
ஜோர்தான் மன்னர் உசைன், லீசா அலபி என்ற அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.
1991
பிலிப்பைன்ஸில் பினாடுபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1994
இஸ்ரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை ஏற்படுத்திக் கொண்டன.
1996
ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.
2014
பாகிஸ்தான் வடக்கு வசீரித்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.















