• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் கொ ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

Mathavi by Mathavi
May 1, 2025
in வரலாற்றில் இன்று
0
இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் கொ ல்லப்பட்டார்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!
Share on FacebookShare on Twitter

1989
இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993
இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார். டி. பி. விஜயதுங்க புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1834
பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.

1840
உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

1844
ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் காவல் துறை அமைக்கப்பட்டது.

1851
லண்டனில் பளிங்கு அரண்மனையில் பெரும் கண்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.

1862
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டு இராணுவம் நியூ ஓர்லென்சைக் கைப்பற்றியது.

1865
பிரேசில் பேரரசு, அர்கெந்தீனா, உருகுவை ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1866
அமெரிக்காவில் மெம்பிசு இனக்கலவரம் ஆரம்பமானது. மூன்று நாட்களில் 46 கறுப்பர்களும், இரண்டு வெள்ளையினத்தவரும் கொல்லப்பட்டனர்.

1875
1873 இல் எரிந்து அழிந்த இலண்டன் அலெக்சாந்திரா அரண்மனை மீண்டும் அமைக்கப்பட்டது.

1884
ஐக்கிய அமெரிக்காவில் எட்டு-மணிநேர வேலை நாள் வேண்டி பொது அறிவிப்பு வெளியானது.

1886
ஐக்கிய அமெரிக்காவில் 8 மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1891
பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.

1893
உலக கொலம்பியக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.

1900
ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

1915
லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர்.

1919
ஜேர்மனியப் படைகள் பவேரிய சோவியத் குடியரசை அழிக்கும் பொருட்டு மியூனிக் நகரினுள் நுழைந்தன.

1925
சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1929
7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஈரான்–துருக்மெனிஸ்தான் எல்லையைத் தாக்கியதில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.

1930
குறுங்கோள் புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1931
நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

1940
கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

1941
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியப் படை துப்ருக் முற்றுகையை ஆரம்பித்தது.

1944
இரண்டாம் உலகப் போர்: 200 கம்யூனிசக் கைதிகள் ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945
இரண்டாம் உலகப் போர்: கிட்லர் இறந்ததை ஜேர்மனியின் செய்தி வாசிப்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1945
இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் பெர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

1945
இரண்டாம் உலகப் போர்: நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ், அவரது மனைவி மேக்டா பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது பிள்ளைகளும் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1945
இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து ஜேர்மனியின் தெம்மின் என்ற இடத்தில் 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டனர்.

1946
மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆத்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1950
குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.

1956
யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1956
மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

1957
இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.

1960
இந்தியாவில் குசராத்து, மகாராட்டிரம் மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

1961
கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1977
தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

1978
ஜப்பானியர் நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

1987
இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு இதித் ஸ்டைன் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

1999
1924 இல் காணாமல் போன பிரித்தானிய மலையேறி ஜார்ஜ் மலோரியின் உடல் எவரெஸ்டு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

2004
சைப்பிரசு, செக் குடியரசு, எசுத்தோனியா, அங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2009
சமப்பால் திருமணம் சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2011
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதப்படுத்தப்படுத்தப்பட்டார்.

2011
பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Related Posts

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 12, 2025
0

1814பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன. 1848சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. 1857மத்திய அமெரிக்கா...

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 11, 2025
0

1889யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. 1998யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன்...

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 10, 2025
0

1817பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது. 2000இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார். 2006முகமாலை முன்னரங்கப்...

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 9, 2025
0

1990சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை...

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 8, 2025
0

1775மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1796பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர். 1831நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். 1860லேடி எல்ஜின் என்ற...

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 7, 2025
0

1978கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 1999இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி...

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 6, 2025
0

1873இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார். 1946இலங்கையில் ஐக்கிய...

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 5, 2025
0

1803இலங்கையில் முதலாவது கண்டிப் போர்க் காலத்தில், அங்வெல்லையில் பிரித்தானியப் படைகளினால் கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. 1902இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல்...

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 4, 2025
0

1800மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது. 1812பிரித்தானிய அமெரிக்கப் போர் - அரிசன் கோட்டை முற்றுகையின் போது...

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 3, 2025
0

1759இலங்கை டச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. 1958தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1189முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி