கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரமானந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
சந்தேகநபரிடம் இருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.