இலங்கையின் முதலாவது ஆண் விந்தணு வங்கி கொழும்பு காசல்ரீ வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மகப்பேற்று வாய்ப்பு இல்லாத பெண்கள் விரும்பியவர்கள் இங்கு விந்தணுக்களை பெற்றுக் கொள்ளலாம் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வங்கிக்கான விந்தணுக்களை வழங்க விருப்பமானவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அதனை வழங்குகின்றவர்களுக்கு இந்த விந்தணுக்களை யாருக்கு வழங்குவது என்ற தகவல்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் இதனைப் பெற்றுக் கொண்டவர் தொடர்பான தகவல்கள் குறித்து இரகசியம் பேணப்படும் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
விந்தணுக்களை வழங்க விருப்பமானவர்கள் வைத்திய பரிசோதனைகளின் பின்னரே இதற்கு அனுமதிக்கப்படுவர்
இலங்கையில் விந்தணு சேமிப்பு வங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டமைஇதுவே முதல் தடவை என அறிவிக்கப்பட்டுள்ளது