1910 கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் நிலைநாட்டினார்.
1946
பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது.
1988
ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
2005
இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.
1801
புளோரன்சு உடன்பாடு: முதல் பிரெஞ்சுக் குடியரசுக்கும் நேப்பிள்சு இராச்சியத்துக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.
1802
என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809
மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்சு எசுப்பானியாவை வென்றது.
1814
பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வால்பரைசோ சமரில் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
1854
கிரிமியப் போர்: பிரான்சும் பிரித்தானியாவும் ரஷ்யா மீது போரை அறிவித்தன.
1879
ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஊலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1910
கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.
1930
கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1933
இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
1939
எஸ்ப்பானிய உள்நாட்டுப் போர்: மூன்று-நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.
1941
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் நடுநிலக்கடற்படை இத்தாலியின் ஐந்து போர்க்கப்பல்களைத் தாக்கி அழித்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் கூட்டுப் படை சென் நசேரில் ஜேர்மனியப் போர்க்கப்பல் டிர்பிட்சை விரட்டுவதற்கு திடீர்த் தாக்குதலை நடத்தியது.
1946
பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது.
1951
முதலாம் இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியப் படைகள் வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகளை மாவோ கே சமரில் தோற்கடித்தது.
1959
சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.
1970
மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1979
பிரித்தானிய மக்களவையில் யேம்சு கலகனின் அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் வெற்றியடைந்தது.
1979
ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுக்கரு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது.
1988
ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
1994
தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1999
கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர்.
2005
இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.


